தர்மபுரி: நல்லம்பள்ளியில் 47 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

81பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் ஜூன் 10 இன்று காலை கூடிய வார சந்தைகள் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் இன்று ஒரு சிறிய அளவிலான ஆட்டுக்குட்டியின் விலை 3, 000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில ஆடுகள் 22, 000 வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் சுமார் 47 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி