தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவன் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவர் கே. வேட்ரப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விட்டு இன்று தான் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மத்தியம்பட்டி பிரிவு ரோட்டு பகுதியில் வந்தபோது அந்த வழியாக அரூரில் இருந்து ஊத்தங்கரை நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சிவனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.