தர்மபுரி: போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

52பார்த்தது
தர்மபுரி: போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வனக்காப்பாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை வருகிற 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்துகிறது. 

மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வர்கள் தயாராகும் வகையில் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து பயிற்சி நடைபெறுவுள்ளது. மேலும் சிறு தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் இந்த மையத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச இணையதள வசதி மற்றும் இலவச கணினி பயன்பாடு வசதிகள் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் உள்ளன.

 எனவே இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி