தர்மபுரி: 4. 40 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை

55பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் வாராந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதி சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலையின் 10000 முதல் அதிகபட்சமாக 20, 000 ஆயிரத்துக்கு விற்பனையானது. நேற்று 22க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரே நாளில் 4. 40லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி