தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி பகுதியில் தர்மபுரி-பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை சிவன் கோவில் அருகே இன்று மார்ச் 20 விடியற்காலை 5 மணியளவில் அளவில் இருசக்கர வாகனத்தில் கடத்தூர் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த புட்டிரெட்டிபட்டி சிவலிங்கம், கெடகாரஅள்ளி வீரப்பன் இருவர் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் மேலும் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீது 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் மேலும் இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.