பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மின்சார துறையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது மோடி அரசின் மக்கள் விரோத ஆணைகளுக்கு அடிபணியாதே அநியாய மின் கட்டணம் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டை கணக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தீர்த்தகிரி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்
இதில் வட்டச் செயலாளர் தனுஷன் மாவட்ட குழு உறுப்பினர் வஞ்சி வட்டக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி