தர்மபுரி: விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..வீடியோ!

1878பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில், வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து 21 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விசிக தலைமை அறிவித்திருந்தது. இதனை அடுத்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று தொலைபேசி நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மண்டல பொறுப்பாளர் நற்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்ட த்தில், தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. இதனால் வருகின்ற 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். அதேப்போல் தமிழ்நாட்டிற்கு மழை பாதிப்புக்கு தேவையான 21, 000 கோடி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர்கள் சி. கே. சாக்கன் சர்மா, த. கு. பாண்டியன், கருப்பன்னன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி