தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.