தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஒன்றிய குழு பொன்மலர் பசுபதி ஒன்றிய செயலாளரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் மற்றும் மு மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர் ஆர் பசுபதி அதிமுக நகர செயலாளர் ARSS பாபு எ அறிவழகன் உதவி செயற் பொறியாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்.