தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால்(86), இவருக்கு இருளப்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதனை பத்திரப்ப திவு செய்ய, நிலம் அனுபவ சான்றிதழ் கேட்டு, பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கோபால், தாசில்தாரின் சீல் மற்றும் கோபுர சீல் முத்திரைகளை தயாரித்து, தாசில்தார் சரவணனின் கையொப்பத்தைபோலியாகபோட்டு, பாப்பிரெட்டிப்பட்டி ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முயன் றார். இதில் சந்தேகமடைந்த ரிஜிஸ்டர் அலுவலக அதிகாரிகள், இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். வரு வாய்த் துறையினர், ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்று, கையெழுத்தை பார்த்து, அது போலியாக போட்ட கையெழுத்து என்பதை உறுதிப்படுத்தி இதுகுறித்து, தாசில்தார் சரவணன் அளித்த புகாரின் பேரில், ஏ. பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பத்திர எழுத்தரான குண்டல்மடுவு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர், கோபாலிடம் ₹1. 75 லட்சம்பெற்றுக்கொண்டு, தாசில்தாரின்கையெழுத்து மற்றும் கோபுர சீல் ஆகிய வற்றை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய கோபாலின் மகன் ராமஜெயத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான சிலரை தேடி வந்த நிலையில், அருள், சந்திரசேகர் ஆகியோரை போலீசார்
நேற்று கைது செய்தனர்.