பாலக்கோடு: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(அக்.25) மாலை ஆட்சியர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2024 வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942. 00 மி. மீ ஆகும். இந்த ஆண்டு தற்பொழுது வரை 573. 38 மி. மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 1, 72, 280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 1, 18, 054 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத்தேவை 41, 030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 13, 514 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ். எஸ். பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.