பாலக்கோடு - Palacode

தர்மபுரி: சாலை விபத்தில் ஜவுளிக்கடை ஊழியர் உயிரிழப்பு

தர்மபுரி: சாலை விபத்தில் ஜவுளிக்கடை ஊழியர் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். தர்மபுரியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று(அக்.17) மாலை தர்மபுரி பாலக்கோடு சாலையில் அல்லியூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த டிராக்டரும், இவர் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண் டன. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரதீப் குமாரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் இன்று (அக்.18) சிகிச்சை பலனின்றி பிரதீப்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்த மதிகோன்பாளையம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பிரதீப் குமார் பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


தர்மபுரி
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.