பாலக்கோடு - Palacode

பாலக்கோடு: 2026 தேர்தலுக்கு முன் சரி செய்யப்படும்..எம்.பி., உறுதி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி கும்மனூர், சூடனூர், நம்மாண்டஹள்ளி, சாமனூர், அத்திமுட்லு, கெலசனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (நவம்பர் 13) தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் நேரடியாக சென்று நன்றி தெரிவித்த தர்மபுரி எம்பி பொது மக்களின் தேவைகள் குறித்து அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் 2026 தேர்தலுக்கு முன்பாகவே தூள் செட்டி ஏரி கால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் எனவும் தமிழக அரசின் நல திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

வீடியோஸ்

தர்மபுரி
Nov 14, 2024, 02:11 IST/பாலக்கோடு
பாலக்கோடு

பாலக்கோடு: 2026 தேர்தலுக்கு முன் சரி செய்யப்படும்..எம்.பி., உறுதி

Nov 14, 2024, 02:11 IST