குடும்ப தகராறில் பெண் மாயம்

587பார்த்தது
தர்மபுரி அடுத்த மதிகோண்பாளையம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாமந்தி இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மணி தம்பதியினர் கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று மாலை சாமந்தி, வேலை முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதுபற்றி மணி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சாமந்தி கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி மணி, மதிகோண் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி