பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஹள்ளி அடுத்த கெலமாரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி பச்சியம்மாள் இவர் நேற்று மாலை, தோட்டத்தில் கால்நடைகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்து பாம்பு ஒன்று பச்சியம்மாளை கடித்து விட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஹள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :