தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 5 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் அரூர் பகுதியில் சாராயம் காய்ச்ச 82 லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சாராய ஊறலை காவலர்கள் அழித்தனர். இது தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.