அரசு ஊழியர்களுக்கான போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

61பார்த்தது
2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 25ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது மொத்த பரிசுத்தொகை ரூ. 37 கோடி ஆகும்.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 23 காலை 10 மணிக்கு அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் தொடக்கி வைத்தார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஆய்வாளர் முத்துக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை விளையாடினார்கள் இதில் வாலிபால், கபடி, ஓட்டப்பந்தயம், பேட்மிட்டன் , உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி