தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகில் சூதாடியவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், ரத்னவேல், பிரகாஷ், மணி சீனிவாசன், மூர்த்தி, மகேந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.