மக்கள் நீதிமன்றத்தில் 1521 வழக்குகளுக்கு சமரச தீர்வு

82பார்த்தது
தர்மபுரி மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேசிய சட்டப் பணிகள் ஆணையர் குழுவின் உத்தரவின்படியும் சென்னை ஹைகோர்ட் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் வழிகாட்டுதல் படியும் தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார் நீதிபதிகள் வழக்குகள் தொடர்பான விசாரணை நடத்தினார்கள் இதேபோல பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சமரசம் செய்க்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், நீதிமன்றங்களை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், வங்கி வார கடன் வழக்குகள் என மொத்தம் 2, 842 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடிவில் 1, 521 வழக்குகளுக்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டு நிலையில் 4 கோடியே 85 லட்சத்திற்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி