உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

50பார்த்தது
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்
தர்மபுரி மாவட்டத்தில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் காவலர்களுக்கு உத்தர விட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் இன்று(செப்.19) காவலர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால், காவலர்கள் காரிமங்கலம் தேசிய நெடுஞ் சாலை மற்றும் பெரியாம் பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாபா, மளிகை கடைகளில் இன்று செப்டம்பர் 19 சோதனை நடத்தினர். அப்போது 4 கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து கடைகளில் இருந்து குட்காவை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 25. ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட் சம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து 4 கடைகளுக்கும் காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் 15 நாட்கள் கடைகள் இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி