பாலக்கோடு: சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

82பார்த்தது
STOP: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாட்லாம்பட்டி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தின் அருகே டிசம்பர் 28 இன்று காலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 24 வயதுள்ள இளைஞர் மீது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் காவல்துறையினர் போக்குவரத்தினை சரி செய்தனர். பின்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி