தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் பாலக்கோடு வடக்கு ஒன்றியம் கெண்டேனே அள்ளி ஊராட்சி சந்தராபுரம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் மண்டபத்தை நேற்று டிசம்பர் 29, மாலை தமிழக முன்னாள் உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. அன்பழகன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி மண்டபத்தை திறந்து வைத்தார். உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.