தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தை திங்கட்கிழமை காலை முதலே தேங்காய் சந்தை நடக்கிறது. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம் நேற்று நடந்த சந்தையில் 1 லட்சத்து 50 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தரம் மற்றும் அளவை பொறுத்து 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் விற்பனை நடந்தது. நேற்று நடந்த சந்தையில் 19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து குறைந்த நிலையில், கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே நடப்பு வாரத்திலும் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.