தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று பிப்ரவரி 04 நடந்த சந்தையில் சுமார் 750 ஆடுகள், 500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 170 லட்சத்திற்கு ஆடுகளும், 45 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக் கோழிகள் 5 லட்சத்திற்கு விற்பனையானது. ஆகமொத்தமாக நேற்றைய சந்தையில் 1. 20 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.