பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

58பார்த்தது
தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நூலஅள்ளி மற்றும் உழவன்கொட்டாய் கிராமங் களுக்கு இடையே 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மற்றும் வேலை நிமித்தமாகவும் தர்மபுரிக்கு செல்ல வேண்டி உள்ளது. தர்மபுரியில் இருந்து நூல அள்ளி வழியாக உழவன் கொட்டாய்க்கு 2 அரசு டவுன் பஸ்கள் தினமும் 10 முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நூலஅள்ளி முதல் உழவன் கொட்டாய் வரையிலான 2 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக போக் குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக, தர்மபுரி நகருக்கு செல்லும் வாக னங்கள் அடிக்கடி பழுத டைகிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி