கடன் பிரச்சினையால் மேஸ்திரி தற்கொலை காவல்துறையினர் விசாரணை

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய மல்லிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மேஸ்திரி. இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 10 லட்சம் கடனாக பெற்றார். இந்த கடனுக்கு 29 மாதங்கள் வட்டி தொகையை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடனை அடைப்பதற்காக பெங்களூருக்கு சென்று 1 மாதம் தங்கி வேலை பார்த் தார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்கு வந்தார். கடன் பிரச்சினை காரணமாக அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் வீட்டில் செல்வராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி