தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே மல்லிகுட்டை ஊராட்சி போதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதுராணி. இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி யான முனியப்பன் என்பவருக்கும் வழித்தட பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாதுராணி அவரது கணவர் விவசாயி முனியப்பனை ஆபாசமாக திட்டி தாக்குவதற்காக பாய்ந்துள்ளனர்.
அவர்களை விவசாயி முனியப்பனின் மனைவி பழனியம்மாள் என்பவர் தடுக்க முயன் றார். இதில், ஆத்திரமடைந்த மாதுராணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் பழனியம்மாளை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த விவசாயி முனியப்பன் கொடுத்த புகாரின்பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து இன்று மாதுரணி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.