சீரடி பாபா கோவிலில் குரு வார ஆரத்தி சிறப்பு வழிபாடு

83பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா திருக்கோவில், இங்கு தினமும் சாமிக்கு ஆறு கால ஆரத்திகள் பூஜை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாட்களில் குரு பகவானுக்கு உகந்த நாள் என்பதால் சீரடி சாய்பாபாவிற்கு அன்று குருவார ஆரத்தி வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று குழு ஆரத்தி தினத்தை முன்னிட்டு நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆரத்தி சேவைகள் நடைபெற்றன மேலும் ஆடி மாதம் என்பதால் சுற்று வாட்டர பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர் கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி