குரூப் 4 தேர்வு 228 மையங்களில் நடக்கவுள்ளது: ஆட்சியர் தகவல்

1408பார்த்தது
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தில்,‌ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, வரும் 9ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மட்டும், தர்மபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 228 தேர்வு மையங்களில் சுமார் 62, 630 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும், பஸ்கள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், தேர்வு மையத்திற்கு செல்லவும். கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி