மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கவும் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க 11/07/2024 அன்று வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர்
திரு M. K. ஸ்டாலின் அவர்களுக்கு திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் காரிமங்கலம் திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்