தர்மபுரி: பெரியாம்பட்டியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

57பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியாம்பட்டி மற்றும் அடியிலும் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடுவதாக காரிமங்கலம் காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் வருகையை கண்டதும் அங்கிருந்த வாலிபர் ஒருவர் தப்பிஓட முயற்சி செய்தார். அவரை விரட்டிப் பிடித்த காவலர்கள் விசாரித்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் அவரிடமிருந்து 50 கிராம் அளவுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி