உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று பிப்ரவரி. 04 தர்மபுரியில் ஜே. சி. ஐ அமைப்பு சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு பேரணி ஆரம்பித்தது நடைபெற்றது. இந்தப் பேரணியில் நல்லம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள், ஜே. சி. ஐ உறுப்பினர்கள் கலந்துகொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி புற்றுநோய் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை குறித்த தகவல்களை கோஷங்களாக முழக்கமிட்டு தர்மபுரி நான்கு ரோடு சாலை சந்திப்பு வரை பேரணியாக நடந்து சென்றனர்.