தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு விதை தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் 2000 விவசாயிகளுக்கு பயிறு விதை தொகுப்புகள் அனைத்து வட்டார வேளாண்மை நிலையங்களிலும் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே வட்டார வேளாண்மை நிலையங்களை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.