தர்மபுரி: சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

51பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் நேற்று வைகாசி மாத ஞாயிறு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் நந்தி மற்றும் லிங்கத்திற்க்கு சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடந்தது. குறிப்பாக தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட எஸ்வி. ரோடு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற சித்த லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பால், தயிர், குங்குமம், மஞ்சள் விபூதி, இளநீர் உட்பட 12 வகையான திரவியங்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் பூஜைக்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி