தர்மபுரி: இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

55பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் இதன் நிலையில் நேற்று சொந்த வேலையாக பாலக்கோடு நகர பகுதி சேர்ந்த கோபி என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பேருந்து நிலைய கடைகளுக்கு முன்பு நிறுத்தி இருந்தார் பின்னர் சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இரண்டு அடி நீளம் உள்ள கொம்பேரி மூக்கன் பாம்பு இருசக்கர வாகனத்தின் எஞ்சின் பகுதிக்குள் நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பை லாபகமாக பிடித்தனர் மேலும் அந்த பாம்பை அடர்ந்த வனப் பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் சென்று விடுவித்தனர் இருசக்கர வாகனத்தில் பாம்பு நுழைந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி