தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அரசு பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கர்நாடக மாநிலமான பெங்களூரில் இருந்தும் தினசரி பட்டுக்கூடுகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று சுமார் 1884 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக 596 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ 513 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 424 ரூபாய்க்கும் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்து 51 ஆயிரத்து 376 ரூபாய்க்கு பட்டுக்குழுக்கள் விற்பனையாளராக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.