தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலிக்கரை அடுத்து சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த நிலையில் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் அவர்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் சாலையை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரித்தல் கழிவுறைகளை சுத்தம் செய்துவிட்ட பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிவண்ணன் என்பவர் நேற்று பிற்பகலில் கழிவறையில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடன் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இது குறித்து அவரது உறவினர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது