தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சியில் உள்ள கசியம்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடுமபத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் வரவில்லை என அப்பகுதி தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, இன்று காலை பகுதி கிராம மக்கள் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா தேவி விரைவில் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.