தர்மபுரி: சுடுகாடு அமைப்பதை எதிர்த்து ஆட்சியரிடம் மனு

85பார்த்தது
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் ஒன்றியம், பந்தாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளனூர் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, சட்டத்திற்கு புறம்பான வகையில் முள்ளனூர் கிராம மக்கள் புதியதாக சுடுகாடு அமைக்கின்றனர். இந்நிலையில் முள்ளனூர் கிராம மக்களுக்கு ஏற்கனவே சுடுகாடு இருக்கும் நிலையில் நீர் பிடிப்பு பகுதியான ஏரியில் சுடுகாடு அமைத்து நீரை மாசு படுத்தி வரும் நிலையில் நிரந்தரமாக சுடுகாடு அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி மோட்டுக் கொட்டாய் மற்றும் வண்டிக்காரன் கொட்டாய் கிராம மக்கள், நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி