தர்மபுரி: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்

67பார்த்தது
தருமபுரி அடுத்த சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டுக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்களும் 138 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் பணிபுரிந்த 4 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவதில்லை எனவும், சரியாக பள்ளிக்கு வருவதுமில்லை என அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்களையும் வெவ் வேறு பள்ளிக்கு கல்வித் பணி மாற்றம் செய்தது.

இந்நிலையில் மாணவர்களுக்கு புரியும்படி முறையாக பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் முனியப்பன், ஆசிரியர்கள் காந்திமதி மற்றும் நித்தியா என்ற 3 ஆசிரியர்களை மீண்டும் இப்பள்ளிக்கு மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பணி மாறுதல் செய்த 3 ஆசிரியர்களை மீண்டும் இதே பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி