தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இன்று (ஏப்ரல் 16), தர்மபுரி நகராட்சி சார்பில் நீர்மோர் பந்தலை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி திறந்து வைத்தார். தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாயுடு, நகராட்சி ஆணையர் சேகர், நகராட்சி ஆய்வாளர் ராஜரத்தினம், நகரமன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், முல்லைவேந்தன், ராஜா சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர் தர்ப்பூசனை, பழம், நீர்மோர் வழங்கினர்.
தற்போது நகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், தர்மபுரி நாங்குரோடு, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.