தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் புதிய அலுவலகம் திறப்பு விழா நேற்று வெகு விமரிசியாக நடைபெற்றது. இந்த இந்த விழாவில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர். ஆ. மணி ஆகியோர் ஒன்றிணைந்து திறந்து வைத்தனர். இதில் மாநில விவசாய அணி து. அ. சூடப்பட்டி சுப்பிரமணி, பேரூராட்சி சேர்மன் பி. சி. ஆர் மனோகரன், துணை சேர்மன் சீனிவாசன், அறங்காவல் குழு தலைவர் கொள்ளுப்பட்டி மாதப்பன், மு. ஊ. தலைவர் கௌரி திருக்குமரன், அறங்காவலர்கள் ஜெயா, சுரேஷ், ஹரி, உட்பட திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் என பல கலந்து கொண்டனர்.