தர்மபுரி: மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

56பார்த்தது
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு காற்று திசைகளின் சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழியும் எனவும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவிய சூழலில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு தருமபுரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பொழிந்தது இதனை தொடர்ந்து இரவு 10 மணியளவில் லேசான இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய துவங்கியது குறிப்பாக நல்லம்பள்ளி பென்னாகரம் , மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானூர், பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி