தர்மபுரி: தர்மபுரியில் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்தமழை

58பார்த்தது
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று ஏப்ரல் 15 விடியற்காலை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது. ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இதனால் கோடை உழவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது வரை வராததை அடுத்து பொதுமக்கள் சற்று அவதி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி