தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடைபெற்றது. இதில்
பதவி உயர் பெற்ற கல்வி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள், பொருளாளர் சுப்பிரமணி, அமைப்பு செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2018 ம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.