தர்மபுரி: வட்டாட்சியர் பணியிடமாற்றம் கொண்டாடிய பொது மக்கள்

73பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டகாரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த கோவிந்தராஜ் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதை அடுத்து இன்று மார்ச் 27 அதை கொண்டாடும் விதமாக வழக்கறிஞர்கள் சரவணகுமார், மணி ஆகியோர் தலைமையில் பொதுமக்களும் வட்டாட்சியர் அலுவலக செல்லும் சாலையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மாவட்ட மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்தனர். மேலும் வட்டாட்சியர் கோவிந்தராஜ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார் எனவே அவர் மீது துறை சார்ந்த விசாரணையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் மேலும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பேட்டி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி