தர்மபுரி ரோட்டரி சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் முற்றிலும் இலவச கண் பொறை அறுவை சிகிச்சை முகாம் தருமபுரி ரோட்டரிஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் கண்ணில் புரை உண்டாகுதல், கண்ணில் சதை வளர்ச்சி, கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், மாலைக்கண், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவர் டிஎன்சி மணிவண்ணன் விவேகானந்தன் குணசீலன் கிருஷ்ணன் ராஜசேகர், வேடியப்பன், மாரியப்பன், விஜய், தென்னரசு, வெங்கடேஷ் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 450 பேர் கலந்து கொண்டனர் இதில்முகாமல் தேர்வு செய்து கண் அறுவை சிகிச்சைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இவர்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அழைத்துச் செல்லப்பட்டனர்.