தர்மபுரி: தீயணைப்பு படை வீரர் தற்கொலை காவலர்கள் விசாரணை

77பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தீயணைப்பு வீரர் சரவணன் இவரது மனைவி முத்துமணி, திருமணமாகி பாலக்கோட்டில் வசித்து வருகிறார் சரவணன். கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். நேற்று இரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி காவலர்கள் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்று வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி