தர்மபுரி மாவட்ட பா. ஜ. க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செட்டிக்கரையில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பார்வையாளர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவின், பொருளாளர் காவேரிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.
ஒன்றிய அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்த வேண்டும். தர்மபுரியில் இருந்து மொரப்பூர் வரை அமைக்கப்படும் 4 வழி சாலையில் ராஜாப்பேட்டை - செட்டிக்கரை இடையே சுமார் 1. 5 கிலோ மீட்டர் தூரம் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துவதை கண்டிப்பது, தர்மபுரி நகரில் பொதுமக்கள் வசதிக்காக இலவச கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.