தர்மபுரி: முன்னாள் பிரதமர் பிறந்தநாள் அனுசரித்த பாஜகவினர்

72பார்த்தது
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடராஜ் தலைமை வகித்தார். மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி, நகர செயலாளர் சக்தி, ஓபிசி அணியின் மாநில செயலாளர் சரவணன், மகளிர் அணி மாநில செயலாளர் சங்கீதா, முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் நகரத் தலைவர் சக்திவேல் ஆகியோர் உட்பட பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டு வாஜ்பாய் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ஓபிசி அணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் அவர்கள் பேசினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி